கொலை செய்யப்பட்டவர்கள் செங்கலடி, மட்டக்களப்பு சேர்ந்த கார்த்திகேசு சந்திரமோகன் 27 , மற்றும் 32 வயது சின்னராசா சண்முகலிங்கம், இவர்கள் திருமணம் ஆகாத செஞ்சிலுவை சங்க தொண்டர்கள் ஆவார்கள் . இவர்கள் கருணா ஓட்டுகுளுவால் 251- 6437 என்ற இலக்கம் உடைய ஒரு வெள்ளை வானில் கடத்தப்பட்டார்கள்.
இவர்கள் பின்னர் கருணா மற்றும் கொத்தவின் உத்தரவின் படி வெள்ளைவான் கடத்தல் கொலைகார கும்பலின் தலைவன் பேபியன் டொசய்ன் கிர்ஸ்டோஃபர் என்ற கோத்தா கருணா கொலைகார கும்ம்பலின் தலைவனால் உயிரோடு இருக்கும்போது கண்களை பிடிங்கி அவர்களை சித்திரவதை செய்து பின்னர் சுட்டு கொன்றுள்ளான்.
இவன் அரச புலனாய்வு பிரிவின் ஒரு கான்ஸ்டபிளாக கோத்தபாய கொலை அணியில் இணைக்கப்பட்டதிலிருந்து 16 பயங்கரமான கொலைகள் செய்ததாக கருதப்படுகிறது இவனது அடையாள அட்டை இலக்கம் 732881719 இவனது பிறந்த இடம் அத்திடிய பிரதேசத்துக்கு பேக்கரி சந்திப்பு என்னும் இடமாகும்.
இவனை வைத்து தற்பொழுது கோத்தபாயவை கைது செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது
Social Buttons