Latest News

March 23, 2015

பகிரங்கமானது ரணில் - விக்கி மோதல்! பரஸ்பரம் கைகுலுக்கவும் மறுப்பு!!
by admin - 0

tgte
வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை கையளிக்கும் நிகழ்வினை வடக்கு முதலமைச்சர் பகிஸ்கரிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட போதும் இறுதி நேரத்தினில் அவரும் பங்கெடுத்திருந்தார். எனினும் ஜனாதிபதியுடன் வருகை தந்திருந்த பிரதமர் ரணிலை அவர் கண்டுகொள்ளவோ வரவேற்கவோ இல்லை.பரஸ்பரம் கைகுலுக்கல்கள் கூட நடந்திருக்கவில்லை.

வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றம் மற்றும் உயர்பாதுகாப்புவலய விடுதலை தொடர்பினில் இருவருமே பரஸ்பரம் முட்;டிக்கொண்டுள்ளனர்.அந்நிலையினில் ரணில் பங்கெடுக்கும் நிகழ்வை முதலமைச்சர் புறக்கணிக்கலாமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும் விடுவிக்கப்படப்போவதாக கூறப்பட்ட ஆயிரம் ஏக்கரினில் வெறும் 430.6 ஏக்கர் காணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இன்று யாழ்.வருகை தந்த ஜனாதிபதி வளலாய் பிரதேசத்தின் 233 ஏக்கர் காணிகளையும், வசாவிளான் கிழக்கு பகுதியில் 197.6 ஏக்கர் காணி உறுதிப்பத்திரங்களை அவற்றின் உரிமையாளர்கள் 60 பேருக்கு இன்று முதற்கட்டமாக வழங்கி வைத்தார்.
மேலும் குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஈ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, காணி அமைச்சர் குணரத்ன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இயாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தா, சுரேஸ்பிறேமச்சந்திரன், மாவைசேனாதிராசா, சந்திரகுமார், சரவணபவன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
« PREV
NEXT »