ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையின் கீழ் ஏற்படும் கூட்டமைப்பினை தவிர வேறு எந்த கட்சியினூடகவும் தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்ட உள்ளுராட்சி பிரதிநிதிகளுடன், நாரஹேன்பிட்டியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் தேசிய அரசாங்கம் குறித்தும் கருத்தினை வெளிப்படுத்தினார்.
இதனை தேசிய அரசாங்கம் என கூறமுடியுமா? இது ஒரு குழப்பமானது என்று நான் நினைக்கின்றேன் என தெரிவித்தார்.
Social Buttons