கொழும்பு - காலி வீதியின் ஒரு வழி வாகன போக்குவரத்து முறைமை நாளை முதல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாளை முற்பகல் 9 மணி முதல் இந்த முறைமை அமுல்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, காலி வீதி, வெல்லவத்தை சுற்றுவட்டம் முதல் டிக்மன் சந்தி வரை கொழும்பு நோக்கி ஒரு வழியில் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுப்ளிகேசன் வீதி எனப்படும் ஆர்.ஏ.டிமெல் மாவத்தை, டிக்மன் சந்தி முதல் டுப்ளிகேசன் வீதி சந்தி வரை, கொழும்பில் இருந்து வெளியேறும் வாகனங்கள் ஒரு வழியில் போக்குவரத்தில் ஈடுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Buttons