நாளையதினம் சிறிலங்காவில் தேசிய அரசாங்கத்தை உருவாக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் இடையில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மகிந்த ஆட்சியில் இருந்த பல அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்
இதன்படி நாளையதினம் இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அந்த கட்சிக்கு 15 அமைச்சுப் பதவிகளும், 10 பிரதி அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளன.
திங்கட் கிழமை அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
Social Buttons