சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் வெகு சிறப்பாக லண்டன் மத்திய பகுதியில் கொண்டாடப்பட்டது. இன் நிகழ்வில் பலதரப்பட்ட அமைப்புகளும் கலந்து கொண்டிருந்தன. பல்லின ,பல தேசங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு இன் நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. லண்டன் ஒக்ஸ்போர்ட் சேர்க்கஸ் ( oxford circus) இல் தொடங்கிய ஊர்வலம் Trafalgar Square இல் முடிவடைந்தது.
இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தார்.
நாடு கடந்த அரசாங்கம் இலங்கை அரசின் போர் குற்றம் ,மற்றும் தமிழ் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான சுண்டுப் பிரசுரங்களை பலதேச மக்களிடம் விநியோகித்ததுடன் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும் எடுத்துரைத்திருந்தனர் .
Social Buttons