Latest News

March 28, 2015

போராளிகள் இன்னமும் மறைந்து வாழ்கின்றனர்!
by Unknown - 0


இறுதிப் போரின்போது சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகளில் 6 முதல் 7 வீதமானவர்கள், கரும்புலிகள் என்ற தற்கொலை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேயதிலக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சரணடைந்தவர்களில் எவ்வித குற்றங்களையும் மேற்கொள்ளாத தற்கொலை போராளிகள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் 12,077 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். இன்று அவர்கள் அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டு வருவதாக விஜேயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதில் ஆண்களை சமூகம் இலகுவில் ஏற்றுக்கொண்ட போதிலும் 2269 பெண்களை சமூகம் புறக்கணித்த அல்லது மதிக்காத நிலை இருந்ததாக விஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளால் பயிற்சியளிக்கப்பட்ட தற்கொலை போராளிகளின் மனநிலையை மாற்றுவது என்பது கடினமான காரியமாகும். அவர்களின் மனங்களில் சிங்களவர்கள் மீது வெறுப்பு நிலை உருவாக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் வாழ்வாதாரம் தொடர்பில் உரிய நிர்வாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் வன்முறைகள் மீண்டும் ஏற்படக்கூடும்.

இதற்கிடையில் 2172 முன்னாள் போராளிகள் இன்னமும் மறைந்து வாழ்கின்றனர். இவர்களால் போராட்டம் மீண்டும் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனினும் துரதிஸ்டவசமாக அவர்களை கைது செய்து புனர்வாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று விஜேயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »