பிரித்தானிய இளவரசர் ஹாரிக்கும் பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹாரிபாட்டர் படத்தின் நடிகை எம்மா வாட்சன்(Emma Watson) மிகவும் கவர்ச்சிகரமான நடிகை என பெயர் பெற்றவர். இந்நிலையில் இளவரசர் ஹாரியும், நடிகை எம்மாவும் காதலிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
ஆனால் இது ஹாரிக்கு புதுக் காதல் இல்லை. ஏனெனில் அவர் பல பெண்களுடன் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டவர்தான். மேலும் எம்மாவும், ஹாரியும் முன்பு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
எனினும் எம்மாவின் நட்பு அவரை ஆறுதல்படுத்தியதாகவும், இருவரும் பல இடங்களுக்கு ரகசியமாக போய் வந்துள்ளதாகவும் ஊடகங்கள் கூறியதால், நடிகை எம்மா கடுங் கோபம் அடைந்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு எம்மா வாட்சன் அளித்துள்ள பேட்டியில், இளவரசரை மணந்தால் தான் இளவரசியாக இருக்க முடியும் என கட்டாயம் இல்லை என்றும் எனக்கும் ஹாரிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Social Buttons