சர்வதேச மாணவர் பேரவை கட்டடம் ஜ.தே.கவின் யாழ்.மாவட்ட அலுவலகமாகின்றது. யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் அமைந்துள்ள இக்கட்டிடம் சர்வதேச மாணவர் பேரவையாக செயற்பட்டிருந்தது. பின்னர் படையினரால் கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்திருந்த இக்கட்டிடம் தற்போது ஜ.தே.கவின் உள்ளுர் பிரபலமொன்றின் சொத்தாகியுள்ளது.
எனினும் இக்கட்டடத்தில் கட்டிட நிர்மாணப்பணிகளை முன்னெடுக்க யாழ்.மாநகரசபை தடைவிதித்திருந்தது. நகர திட்டமிடல் விதிமுறைகளினை தாண்டி அக்கட்டடம் விஸ்தரித்து கட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது அதனை ஜ.தே.கவின் யாழ்.மாவட்ட தலைமை காரியாலயமாக பயன்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. எதிர்வரும் 28 ம் திகதி வருகை தரவுள்ள பிரதமர் ரணில் இக்கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons