Latest News

March 30, 2015

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கக் கூடிய நிலை
by admin - 0

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


புதிய அரசியல் சாசனத் திருத்தங்களை நிறைவேற்றிக் கொள்ள பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகின்றது.எனினும், தற்போதைய அரசாங்கத்திற்கு இவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கும் நோக்கில் கூட்டத் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.குருணாகல் பிரதேசத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பாராளுமன்றில் தனியாக செயற்படவும் தங்களது குழுவில் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டால் ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடி நிலைமை ஏற்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »