![]() |
LTTE |
புதிய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா இன்று கொழும்பில் நடத்திய ஊடகவிலயாளர் சந்திப்பில் இது தொடர்பிலான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்து நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்த களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், மீள ஒருங்கிணைவதற்கான மிகப் பாரிய ஆபத்து காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் வெளிநாடுகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், கப்பல்கள் நிறுவனங்கள் என பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த நவம்பர் மாதம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடை விதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இதனை புரிந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய சொத்துக்களை அபகரித்துக் கொள்ள முயற்சித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அப்போதைய அரசாங்கம் தடையை நீக்க எவ்வித முனைப்புக்களையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Social Buttons