உலகின் முதலாவது மனிதர்களின் தாடை என்று கருதப்படும் எலும்பு துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவில் இந்த தாடை மீட்கப்பட்டுள்ளது.
இது 2.8 மில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலமானது, உலகின் முதலாவது மனித இனம் வாழ்ந்ததாக கணிக்கப்படும் காலத்தை விட, 4 லட்சம் வருடங்கள் முந்தியது என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த தாடை மீட்கப்பட்டுள்ளமையானது, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மனிதன் கூர்ப்படைந்துள்ள விதம் குறித்த தெளிவான அறிவை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
No comments
Post a Comment