Latest News

March 20, 2015

உலகக் கோப்பை கால்பந்து போட்டி- கிளப்புகளுக்கு பிஃபா இழப்பீடு
by Unknown - 0

ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கால் பந்தாட்டங்களில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீர்ர்களின் தாய்க் கிளப்புகளுக்கு 209 மில்லியன் டாலர்களை தருவதற்கு, உலகக் கால்பந்தாட்ட விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பான ஃபிஃபா சம்மதித்துள்ளது.

அதே அளவு பணத்தை 2022 ஆம் ஆண்டின் கட்டாரில் நடக்கவுள்ள போட்டிக்கும் ஃபிஃபா வழங்கவுள்ளது.

இந்த பணம் கடந்த ஆண்டு பிரேசிலில் நடந்த உலக்க்கோப்பை ஆட்டத்தின் போது , விளையாடிய வீர்ர்கள் சார்ந்திருந்த கிளப்புகளுக்கு வழங்கப்பெற்ற 70 மில்லியன் டாலர்களை விட மிகவும் அதிகமானது.

ஐரோப்பிய அணிகளின் கூட்டமைப்பு இந்த முடிவை வரவேற்றுள்ளது. ஐரோப்பாவில் கிளப் மட்ட கால் பந்துப் போட்டிகள் நடக்கும் காலகட்டத்தில், கத்தாரில் உலக்கோப்பை நடைபெறவுள்ளதால் அந்த கிளப்புகளுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய எழுந்த கோரிக்கைகளுக்கு இந்த ஒப்பந்தம் முடிவு கட்டக்கூடும் என செய்தியாளர்கள் கூறினர்.
« PREV
NEXT »