1996 செப்டெம்பர் மாதம் 7ம் திகதி சுண்டிக்குளம் உயர் மகளில் கல்லூரியில் கல்வி பயின்று வந்த 18 வயதான கிரிஷாந்தி குமாரசுவாமி மாணவியை கைதடி இராணுவ சோதனைச்சாவடியில் காணாமல் போகச் செய்த சம்பவத்தின் பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவி கூட்டு கற்பழிப்பு செய்து கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.
அந்த சம்பவத்தில் அப்போதைய உயர் இராணுவ அதிகாரி மற்றும் சிப்பாய் சந்தேகநபராக காணப்பட்டனர். இறுதியில் படைச் சிப்பாய் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கொலையாளியாகவும் காண்பிக்கப்பட்டார். அந்த சிப்பாயின் பெயர் சோமரத்ன ராஜபக்ஷ. உயர் அதிகாரிகள் தன்னை காட்டிக் கொடுத்ததால் இன்று சிறைக்குள் தவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் பின் செம்மணி பகுதியில் கூட்டுக் கொலை சம்பவம் பதிவானது. இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. குறித்த வழக்கு வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இது தொடர்பில் விசாரணை தேவைப்படுகிறது. ஒருவகையில் செம்மணி புதைக்குழு விடயத்தில் எவரும் குற்றவாளியாக அறிவிக்கப்படாததால் சர்வதேச சமூகத்திற்கு இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை 1997ம் ஆண்டு கூறியது போல 1996-1997 காலத்தில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 600 சிவிலியன்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட பின் அவர்கள் காணாமல் போயுள்ளனர்.
எனினும் வௌியாகியுள்ள தகவலுக்கு அமைய கிரிஷாந்தி குமாரசுவாமி வழக்கில் சிறையில் உள்ள சோமரத்ன ராஜபக்ஷ குற்றவாளியோ கொலையாளியோ இல்லை என்றும் உயர் அதிகாரியின் கட்டளையை செயற்படுத்தியவர் மாத்திரமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிணம் எரித்தல் மற்றும் தங்கம் அருகில் வைத்திருந்தல் போன்றவற்றையே அவர் செய்துள்ளார். அப்பகுதியில் அதிக கற்பழிப்பு, கொலை என்பவற்றை புரிந்தவர்கள் அராலி இராணுவ முகாம் பொறுப்பாளராக கடமையாற்றிய 61834 இலக்கமுடைய கெப்டன் சி.ஜே.டிகே.லலித் ஹேவா மற்றும் இலக்கம் 62188 கெப்டன் டி.ரி.சசிக பெரேரா, 62421 கெப்டன் சவிந்ர விஜேசிறிவர்த்தன, 63088 லெப்டினன் ஏ.யட்டகம ஆகியோரே என சோமரத்ன ராஜபக்ஷ தகவல் வௌியிட்டுள்ளார்.
chemmani 2
செம்மணி புதைக்குழிக்கு காரணமானவர்களை சோமரத்ன அடையாளம் காட்டியபோதும் அப்போதைய அரசாங்கம் அதனை கணக்கிலெடுக்கதில்லை. அதன்படி சாட்சியாளராக சோமரத்னவை பயன்படுத்தி B 28/99 என்ற இலக்கத்தின் கீழ் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அரச சாட்சியாளராக சோமரத்னவின் வாக்குமூலத்தின் படி 2000 மார்ச் 13ம் திகதி யாழ் நீதிமன்றில் B 28/99 இலக்கமுடைய பீ அறிக்கைக்கு அமைய அதிகாரிகள் நால்வரும் சிறை வைக்கப்பட்டனர்.
அவர்களின் கடவுச்சீட்டும் நீதிமன்றால் முடக்கப்பட்டது. ஆனால் அவர்கள் H.C.B.A.29/2000 என்ற வழக்கு எண் கீழ் 2000 ஜூலை 6ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு தனிப்பட்ட சட்ட உதவி வழங்கியவர் அப்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் உதவி சட்டமா அதிபராக கடமையாற்றிய பீட்டர் மொஹான் மைத்திரி பீரிஸ் ஆவார்.
அதன்பின் சம்பந்தப்பட்டவர்கள் உயர் பதவிக்கு சென்றதால் செம்மணி வழக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. நீதிமன்றம் வசம் இருந்த அவர்களின் கடவுச்சீட்டும் திருப்பி அளிக்கப்பட்டது. இதற்கென சம்பந்தப்பட்டவர்கள் சட்ட உதவியாளருக்கு குறிப்பிடத்தக்க அளவு பணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செம்மணி புதைக்குழி வழக்கிற்கு என்ன ஆனது?
chemmani 3
இந்த வழக்கின் சந்தேகநபர்கள் இன்று மிகவும் ஆடம்பரமாக நலமாக வாழ்வதுடன் அரச தரப்பு சாட்சியாளரான சோமரத்ன ராஜபக்ஷ சிறையில் வாடுகிறார். இதில் உள்ள சிறப்பு கொலையாளிகள், குற்றவாளிகள் சந்தேகநபர்களுக்கு சட்ட அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்றபோதும் இந்த இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அன்று கெப்டனாக இருந்த லலித் ஹேவா இன்று சிரேஸ்ட லெப்டினன் கேணலாக பானந்துரை இராணுவ விடுதி பொறுப்பாளராக உள்ளார். கெப்டன் சசிக பெரேரா இன்று சிரேஸ்ட லெப்டினன் கேணலாக மன்னார் இராணுவ முகாம் பொறுப்பாளராகவும் கெப்டன் சவிந்திர விஜேசிறிவர்த்தன இன்று கனிஸ்ட லெப்டினன் கேணலாக முல்லைத்தீவு இராணுவ முகாம் பொறுப்பாளராகவும் செயற்படுகின்றனர். லெப்டினன் யட்டிகம இன்று இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அண்மையில் வௌியான மேலும் சில தகவல்கள் வருமாறு, அண்மையில் ராஜபக்ஷ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வெலிக்கடை சிறை கொலைக்களத்தில் சோமரத்ன ராஜபக்ஷவும் பலிவாங்கப்பட இருந்தார். ஆனால் என்றாவது சிறைக்குள் தனக்கு மரணம் நிச்சயம் என அறிந்திருந்த சோமரத்ன விழிப்பாக இருந்து உயிரை காப்பாற்றிக் கொண்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை வெற்றிபெறச் செய்ய செம்மணி சம்பவ சந்தேகநபர்கள் கடும்பாடு பட்டுள்ளதாகவும் கோட்டாபயவின் கையாட்களாக செயற்பட்டதாகவும் தெரியவருகிறது.
ஆனால் இன்றுவரை செம்மணி அவலத்திற்கு நியாயம் பெற்றுக் கொடுக்க இலங்கை அரசு தவறியுள்ளது என்பதை கூற வேண்டும். அதற்கு நியாயம் பெற்றுக் கொடுக்க நல்லாட்சி அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது என்பதை நினைவுபடுத்துவோம்.
Social Buttons