வவுனியா வைரவப்புளியங்குளம் வர்த்தகர் ஒருவர் பூந்தோட்டம் பகுதியில் வைத்து நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
வவுனியா வைரவப்புளியங்குளம் புபையிரத நிலைய வீதியில் உணவு விடுதி நடத்தி வந்த வடிவேல் அழகன் என்ற 45 வயதுடைய வர்த்தகரே கொல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வைரவப்புளியங்குளத்தில் இருந்து பூந்தோட்டத்தில் உள்ள தனது தாயாரைப் பார்த்ததன் பின்னர் பூந்தோட்டம் பி.எஸ்.சி தனியார் கல்வி நிலையத்திற்கு எதிரில் நேற்றிரவு 11 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தானியங்கி இயந்திரத் துப்பாக்கியே இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் பற்றி அறிந்ததும், சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
2000 ஆண்டில் நடந்த பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவர் குறைந்த வாக்குகளால் தோல்வியடைந்தார் இவர் SUN TV மீள் ஒளிபரப்பை வவுனியாவில் நடத்தி வந்தவர் இவருக்கு வவுனியா இராணுவபுலனாய்வுத்துறையினர் அச்சுறுத்தல் ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடதக்கது . அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி முழு நேர வர்த்தகராக உணவு விடுதி நடத்தி வந்தார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments
Post a Comment