இராணுவப் புலனாய்வாளர்கள் என தம்மை அறிமுகப்படுத்திய இருவர் அப் பகுதி இளைஞர்களின் மோட்டார் சைக்கிளை வாங்கிச் சென்றுவிட்டு மதுபோதையில் திரும்பி வந்த வேளையில் மோட்டார் சைக்கிளை மீளக் கேட்டபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.
இராணுவப் புலனாய்வாளர்கள் நபர்கள் எனப்பட்ட பரஸ்பரம் வாக்குவாத்தில் ஈடுபட்டதுடன் பரந்தன் பகுதி இளைஞர்களை தாக்கிவிட்டு பரந்தன் 662ஆவது படைமுகாமுக்குள் புகுந்துள்ளனர்.
சில நிமிடங்களில் பொல்லுகள் தடிகளுடன் முகாமிற்குள் இருந்து வந்த இராணுவத்தினர் அப் பகுதி இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இராணுவத்தினர் இளைஞர்களின் கைத் தொலைபேசிகளை பறிமுதல் செய்தனர். இதேவேளை அப் பகுதியில் மக்கள் திரளத் தொடங்கியதுடன் இராணுவத்தினர் மீண்டும் முகாமிற்குள் சென்றுள்ளனர்.
இவைகளால் பரந்தன் சந்திப் பகுதி சற்று நேரத்திற்கு முன்னர்வரை பதற்றம் நிறைந்து காணப்பட்டதாகவும் அங்கிருந்து செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
Social Buttons