தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் கடற்புலித் தளபதிகளில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முருகேசு பகீரதி என்ற பெண் புலிப் போராளியும் அவரது 8 வயது மகளான ஜெயகணேஸ் பகலவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
பெண் உறுப்பினர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண் பிரான்ஸிற்கு செல்ல முயற்சித்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு பிரான்ஸில் திருமணம் முடித்துள்ளார். இருவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை கைது செய்யப்பட்ட பகிரதியும் மகள் பகலவியும் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை கைது செய்யப்பட்ட பகிரதியும் மகள் பகலவியும் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கைதுகள் தொடந்த வண்ணமே உள்ளதாகவே புலப்படுகிறது .
பிரான்ஸ் செல்லவிருந்த தாயும் மகளும் கட்டுநாயக்காவில் விமானத்தில் வைத்து கைது!
பிரான்ஸ் செல்லவிருந்த தாயும் மகளும் கட்டுநாயக்காவில் விமானத்தில் வைத்து கைது!
Social Buttons