தெமடகொட - சிறிதம்ம மாவத்தைக்கு அருகாமையில் உள்ள குப்பை கிடங்கொன்றில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட இரண்டு மனித கால்கள் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த பெண், உண்மை தகவல்களை மறைத்தமை தொடர்பிலே கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி சிறிதம்ம மாவத்தைக்கு அருகாமையில் உள்ள குப்பை கிடங்கொன்றில் இருந்து இரண்டு மனித கால்களும், சாவி கொத்தொன்றும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
Social Buttons