Latest News

March 28, 2015

இணையத்தில் மைதிரிக்கு எதிராக பதிவிட்டவர் கைது
by admin - 0

இணையத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக சேறு பூசிய நபரை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போலியான தகவல்கள் போலியான புகைப்படங்களை பேஸ்புக் மூலம் பிரச்சாரம் செய்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இம்முறை எனது வாக்கு மஹிந்த ராஜபக்சவிற்கே எனக் குறிப்பிட்டு முகப்புத்தகத்தில் பிரச்சாரம் செய்துள்ளார்.
பதுளையைச் சேர்ந்த சுஜித் நிலந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்களை கடுமையாக மீறிச் செயற்பட்டுள்ளதுடன் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படக்கூடிய குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் நேபாளத்திலிருந்து கடந்த 25ம் திகதி நாடு திரும்பிய போது  பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கொரியாவிற்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு சேறு பூசும் நோக்கில் பேஸ்புக்கில் புகைப்படப் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 1ம் திகதி வரையில் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.
« PREV
NEXT »