Latest News

March 28, 2015

ஐ.நா மனித உரிமைச்சபையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எதனை முதன்மைப்படுத்தியது?
by admin - 0

இடம்பெற்று முடிந்த ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில், தமிழனப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் ஐ.நா பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் அடிப்படையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திரத்தளம், மனித உரிமைத்தளம், மக்கள்தளம், பரப்புரைத்தளம், ஊடகத்தளம் என பன்முகத்தளத்தில் இதன் செயற்பாடுகள் அமைந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TGTE,VIVASAAYI.COM
TGTE
குறிப்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஐ.நா மனித உரிமைச்சபை உரையின் பொய்மைத்தன்மையினை அம்பலப்படுத்தி, நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்ட பதிலறிக்கை இக்கூட்டத் தொடரில் முக்கியமானதாக அமைந்திருந்நதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் ஐ.நாவை பாராப்படுத்தக் கோரும் வகையில் பத்து இலட்சம் கையெழுத்துக்களை திரட்டு இயக்கம், நியூயோhக்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு முன்னாலும், ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக்கு முன்னாலும் தொடங்கி வைக்கப்பட்டது முக்கியமான செயல்முனைப்பாக அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையில் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் வெளியிடப்படுவது போல் இம்முறையும் *Refer Sri Lanka to International Criminal Court *எனும் தலைப்பில் கையேடு வெளிக்கொண்டு வரப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




« PREV
NEXT »