vivasaayi |
விளாடிமிர் புட்டின் கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாததையடுத்து அவர் எங்குள்ளார் என்பது குறித்தும் அவரது உடல் நலம் குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
அவர் இராணுவ சதிப்புரட்சியொன்றின் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக சில தகவல்களும் அவர் திடீர் மரணத்தை தழுவியுள்ளதாக சில தகவல்களும் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் அவர் குளிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருப்பதாக ரஷ்ய தொலைக்காட்சி ஊடகம் இறுதியாக அறிவித்திருந்தது.
மேற்படி ஊடகத்தின் செய்திக்கு மாறாக விளாடிமிர் புட்டின் ஆரோக்கியமான தோற்றத்தில் திங்கட்கிழமை காணப்பட்டுள்ளார்.
புட்டின் திங்கட்கிழமை செயின்ட் பீற்றர்ஸ்பேர்க் நகரிலுள்ள கொஸ்டான்ரினோ மாளிகையில் கஸகஸ்தான் ஜனாதிபதி அல் மாஸ்பெக் அதம் பேயவ்வை சந்தித்து உரையாடினார்.
Social Buttons