திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் தங்கள் பூர்வீக காணியில் மீள்குடியேற சென்றபோது எதிர் வரும் 25ஆம் திகதிவரை அப்பகுதியில் குடியேற முயற்சிக்க வேண்டாம் என புதைபொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் தங்கள் பூர்வீக காணியானது தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு சொந்தமானது என தெரிவித்துக் கொண்டு இராணுவத்தினரும் பௌத்த மதத் தலைவரும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு இப்பகுதியை விஸ்தரிப்பதற்கு முயற்சிப்
பது தொடர்பிலும் அம் மக்கள் கண்டனம் தெரிவிக் கின்றனர்.
இது குறித்து தெரியவருவதாவது;
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியை அண்டிய அவர்களது சொந்த காணிகளை துப்புரவு செய்து குடியேற முற்பட்டபோது இது தொல் பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான காணி
என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்க ளுடன் பேசி இப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்து பொலிசார் இவர்களை தடுத்து நிறுத்தியதாக இந்த மக்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று திங்கள் கிழமை மன்னார் யாழ்ப்பாணம் தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகளான வி.மணிமாறன்,பா.கபிலன் ஆகியோர் இப் பகுதிக்கு வருகை தந்து சம்பந்தப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
எதிர்வரும் 25 ஆம் திகதிவரை அப்பகுதி
யில் குடியேற்றம் தொடர்பான வேலை களை நிறுத்திவைக்கும் படியாகவும் குறித்த பிரச்சினைகள் தொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று மார்ச் 25 ஆம் திகதி இதற்கான முடிவு அறிவிக்கப்படும் வரை பொறுமையாக இருக்கும்படி அவர்கள் தெரிவித்ததுடன் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லுமுகமாக இக் காணிகளுக்கு உரிமை கோருபவர்களின் காணி உறுதிப்பத்திரங்கள் உரிமை பத்திரம்(பேமிற்) அவர்களின் கடிதங்கள் ஆகியவற்றை சேகரித்துச் சென்றனர்.
அதற்கு இணங்க இந் நடவடிக்கையை ஏற்று கொண்ட மக்கள் மார்ச் 25 ஆம் திகதி வரை காத்திருப்பதாக கூறியதுடன் 25ஆம் திகதி எமது காணிகளில் குடியேற அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
1960 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தே தாங்கள் குடியிருந்ததாகவும் 1990ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த சுழ்நிலைகாரணமாக இடம்பெயர்ந்து சென்று பின்பு யுத்தம் நிறைவுபெற்று சாதகமான சூழ்நிலை தோன்றியதை அடுத்து 2010 ஆம் ஆண்டு அப்பகுதிக்கு மீள்குடியேற வந்தபோது தொல் பொருள் வலயம் என தெரிவித்து தங்களை மீள்குடியேற விடாது தடுத்ததுடன் இன்று வரை பல முறை தமது சொந்த பூர்வீக காணியில் குடியேற முயற்சித்தபோதும் குறித்த பகுதி தொல்பொருள் வலயம் என தெரிவித்து இராணுவம்,பொலிஸ் மற்றும் புதை பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதி
காரிகள் தொடர்ந்து எங்களை சொந்த காணிகளில் குடியேற அனுமதி வழங் காது தடுத்து வருவதாக மக்கள் தெரிவிக் கின்றனர்.
அதே நேரத்தில் இக் காணியில் இராணுவம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருவதுடன் இப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் பௌத்த மத குரு தங்கள் காணிகளை தனதாக்கிக் கொள்ளும் முயற்சில் ஈடுபடும்போது ஏன் எங்களுக்கு மட்டும் எங்கள் சொந்த காணியில் குடியேற தடை விதிக்கப்படுகிறது என இந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Social Buttons