இந்த பகுதியில் உள்ள தனியார் காணித் துண்டு ஒன்றில் கடந்த 15ம் திகதி 40 அடி பள்ளம் ஏற்பட்டிருந்தது.
இது குறித்து ஆய்வு செய்த போது இந்த விடயம் தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்துக்கு கீழே உள்ள குகையின் சுண்ணாம்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் இந்த பள்ளம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த பகுதியின் 500 மீற்றர் பிரதேசத்தை பொது மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்குள்ள 26 குடும்பங்களின் 90 பேர் வேறு இடமொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த இடிபாட்டுக்கும், உமாஓய வேலைத்திட்டத்துக்கும் இடையில் சம்பந்தம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment