Latest News

March 25, 2015

19ஆவது திருத்தமும் மறுசீரமைப்பும் சதியின் விளைவு-ஜாதிக ஹெல உறுமய
by Unknown - 0

இந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்தமும் மறுசீரமைப்புகளும் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக தேர்தல்களில் வெற்றி பெற முடியாத நபரொருவரினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சதியின் விளைவு என ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது. 

இந்த புதிய திருத்தங்களின் நோக்கம் நிறைவேற்று ஜனாதிபதியை அதிகாரமற்றவராக நல்லாட்சிக்கு எதிரான வகையில் பிரதமரை அதிகார மிக்கவராக்குவதேயாகும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார். 

'நிறைவேற்று அதிகாரமுள்ளவரின் எதேச்சாதிகார அதிகாரங்களை மட்டுப்படுத்தவே ஜனாதிபதிக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்கியுள்ளனர். பிரதமரை நிறைவேற்று அதிகாரமுள்ளவராக்கவும் அரச தலைவராக்கி நாடாளுமன்றத்தை அடக்குவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் கட்சி தலைமையகத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

19ஆவது திருத்தத்திலுள்ள சீரமைப்புகள் திடீரென செய்யப்பட்டவை எனவும் மக்களின் விருப்பத்துக்கு எதிரானது எனவும் கூறிய அவர், ஜாதிக ஹெல உறுமய ஏனைய கட்சிகளின் ஆதரவோடு நாடாளுமன்றில் 19ஆவது திருத்தம் தோற்கடிக்கப்படுவதை நிச்சயப்படுத்தும் எனவும் கூறினார்.
« PREV
NEXT »