Latest News

February 18, 2015

சர்ச்சைக்குரிய தீர்ப்பினால் சிக்கலில் தர்மசேன!
by Unknown - 0

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை நடுவரான குமார் தர்மசேன வழங்கிய தீர்ப்பொன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

அவுஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான போட்டியின் கடைசி விக்கெட்டில் ஜேம்ஸ் எண்டர்சனுடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லருக்கு (98 ரன்), ஹெஸ்லேவுட்டின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை ஆட்சேபித்து அவர் அதனை 3 ஆம் நடுவரிடம் மீள் பரிசோதனைக்கென முறையீடு செய்த போது, வீடியோ 'ரிப்ளேயில்' பந்து விக்கெட்டை விட்டு விலகி செல்வது தெரியவந்ததால் ஆட்டமிழக்கவில்லை என்று நடுவர் தீர்ப்பை மாற்றினார்.

இதற்கிடையே, எதிர்முனையில் ஜேம்ஸ் எண்டர்சன் வெளியே நின்று கொண்டிருந்ததால் அவரை அவுஸ்திரேலிய வீரர் மெக்ஸ்வெல் ரன்-அவுட் செய்தார். இதற்கு முறையீடு செய்த போது, 3ஆவது நடுவரின் உதவியுடன் கள நடுவர் தர்மசேன விரலை உயர்த்தி ஆட்டமிழந்ததாக அறிவிக்க போட்டி முடிந்து போனது.

இதனால் சதம் அடிக்க முடியாத அதிருப்தியுடன் டெய்லர் வெளியேறினார். இந்த நிலையில் கடைசி கட்டத்தில் நடுவர்கள் அளித்த தீர்ப்பு தவறானது என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) ஒப்புக் கொண்டுள்ளது.

‘ஜேம்ஸ் டெய்லருக்கு எல்.பி.டபிள்யூ. கொடுக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு அந்த பந்தில் மேற்கொண்டு ஓட்டம் எடுக்கவோ அல்லது ஆட்டம் இழப்புக்கோ வாய்ப்பு இல்லை என்பது விதியாகும்’ அதாவது அந்த பந்து 'டெட் போலாகவே' கருதப்படுமென என்று ஐ.சி.சி. தெளிவுபடுத்தியுள்ளது.

இத்தீர்ப்பு தொடர்பில் தற்போது பரவலாக விமர்சன ங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் குமார் தர்மசேன மற்றும் அலிம் தார் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »