ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை பொருட்படுத்தாது, அந்த கட்சியின் சிலர் தரப்பினர் நுகேகொடையில் இடம் பெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளனர்.
'மஹிந்தவுடன் நாட்டை வெற்றி கொள்ள நீங்கள் தயாரா" என்ற தொனிப்பொருளில் நாளை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய ஆகிய கட்சிகளே இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இதனிடையே, நாளை இடம்பெறவுள்ள பொதுக் கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளவுள்ளதாக மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மனசாட்சி உள்ள மனிதர் என்ற அடிப்படையில் தாம் அதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை வெற்றிப்பெற செய்யும் நோக்கிலும் அதன்பொருட்டு செயற்படும் ஒருவர் என்ற வகையிலும் தாம் இந்த தீர்மானத்திற்கு வந்தாக அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்தவுடன் இது தொடர்பில் கலந்துரையாடயதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிளவுப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
Social Buttons