Latest News

February 02, 2015

திஸ்ஸவுக்கு விளக்கமறியல்!
by Unknown - 0

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையில் வைத்து இன்று பகல், இரகசிய பொலிஸாரால்  கைது செய்யப்பட்ட திஸ்ஸ அத்தநாயக்கவை  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது என்று கூறி போலி ஆவணமொன்றை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »