Latest News

February 06, 2015

சுவிசிலும் பிரித்தானியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டங்கள்
by Unknown - 0

ஐ.நா மனித உரிமைச்சபையினை மையமாக கொண்டு தமிழினப் படுகொலைக்கான பரிகாரநீதியினை வென்றெடுத்தல் தொடர்பில், சமகால அரசியற் பொதுக்கூட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை முடிவுகள், சிறிலங்காவின் ஆட்சிமாற்றத்தினை மையப்படுத்தி அனைத்துலக மட்டத்தில்  வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் இக்கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் வரும் (08-02-2015) பெப்ரவரி 8ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவிசிலும், பிரித்தானியாவிலும் இப்பொதுக்கூட்டங்கள் இடம்பெற இருப்பதோடு, நா.தமிழீழ அரசாங்கின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் காணொளிவழி பங்கெடுக்கின்றார்.

சுவிசில் மாலை 18மணிக்கு Volkhaus, Stauffacher Strasse 60, 8004 Zurich எனும் இடத்திலும், பிரித்தானியாவில் 1 மணிக்கு முருகதாசன் திடலுக்கு முன்னர் உள்ள C&L Country Club, West End Road, Northolt, UB5 6RD. இவ்விடத்திலும் இக்கூட்டங்கள் இடம்பெற இருக்கின்றன.

பொதுமக்கள் தமிழ் அமைப்புக்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் என அனைவரையும் இப்பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு கோரியுள்ளது.


« PREV
NEXT »