Latest News

February 05, 2015

விஸ்பரூமெடுத்த சட்டக்கல்லூரி மாணவர்கள்- தமிழகம் முழுவதும் போராட்டம் – முடங்கிய போக்குவரத்து!!
by admin - 0

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தினால் முக்கிய நகரங்களில் போக்குவரத்து முடங்கியது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை ஸ்ரீபெரும்புதூருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இதைக் கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால் நேற்று பாரிமுனையில் போக்குவரத்து முடங்கியது. பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.

 போலீசார் தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்தனர். இதனையடுத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டக்கல்லூரிக்கு ஒருவாரகாலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

« PREV
NEXT »

No comments