கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய அரசின் தீர்மானம் தொடர்பில் இந்திய அரசு அதிர்ப்தியில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னால் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரினால் இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட போதிலும் புதிய அரசின் பதவியேற்பின் பின் இத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந் நிலையில் கொழும்பு நகர துறைமுக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என, அமைச்சரவை பேச்சாளரும்,சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் கடலில் மணல் நிரப்பி நிர்மாணிக்கப்படும் இத்திட்டமானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நடாத்தப்பட்ட ஆய்வில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து துறைமுக நகர திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய அரசினால் இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படும் என்ற இந்திய அரசின் நம்பிய இந்திய அரசிற்கு இலங்கையின் இச் செயல் அதிருப்தி அளிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Social Buttons