இப்பொழுதும் கைதுகள் விசாரணைக்கு அழைத்தல் என்பனவும் தொடர்கின்றது என்று என பிரித்தானிய உயஸ்தானிகரிடம் தெரிவித்ததாக பாரளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டேவிஸ் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு எமது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தச்சந்திப்பின்போது கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின் வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள நிலைமைகள் தொடர்பாக பிரித்தானிய உயஸ்தானிகர் என்னிடம் வினவினார்
இவர்களின் வினாக்களுக்கு பதிலளிக்கையில்
ஜனாதிபதி தேர்தலின் பின்னாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.
மெல்ல மெல்ல மக்கள் இந்த அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையை இழந்தே வருகின்றனர். இன்னும் இராணுவ பிரசன்னங்கள், இராணு முகாம்கள், ரோந்துகள் என்பவற்றில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இப்பொழுதும் கைதுகள் விசாரணைக்கு அழைத்தல் என்பனவும் தொடர்கின்றது. மீள் குடியேற்றம் இன்னும் நிகழவில்லை. அறிவிப்பு நிலையில் இருக்கின்ற பலவிடயங்கள் இன்னும் செயற்படுத்தபடவில்லை.
தொழில் வாய்ப்பு இன்மையால் முன்னாள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் மிகவும்
கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்கு தொழில் வழங்கக்கூடிய பண்ணைகள் தொழிற்சாலைகள் இன்னும் இராணுவப்பிடிக்குள்ளேயே இருக்கின்றது. அல்லது இயங்க வைக்கப்படவில்லை.
போர் காரணமாக தாம் படித்த படிப்புக்கு உரிய வயதில் வேலை பெறமுடியாத நிலையில் தற்பொழுது கோரப்படும் விண்ணப்பங்களுக்கு வயது சென்றமையால் வேலைக்கு விண்ணப்பிக் முடியாமல் மிகவும் மனப்பாதிப்புக்கு ஏராளம் பேர் உள்ளாகியுள்ளனர் என்றார்.
மேலும் 70 ஆண்டுகளுக்கு மேலாக காணப்படுகின்ற இலங்கை இனப்பிரச்சனைக்க சர்வதேச
மத்தியஸ்தத்துடன் ஒரு தீர்வு காணப்பட்டு, தமிழர்கள் வடக்கு கிழக்கில் நிம்மதியாக வாழுகின்ற நிலை வரவேண்டும் அதற்கு பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் முன்வரவேண்டும் என தெரிவித்ததுடன் ஐ.நாவில் முன்னெடுக்கப்படும் போர்க்குற்ற விசாரணைக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சமும் மக்களுக்கு இருக்கின்றது என கூறினேன்.என்று தெரிவித்தார்.
No comments
Post a Comment