நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு பிரதமருக்கான அதிகாரங்களுடனான புதிய ஜனநாயக பாதையை நோக்கி இலங்கை பயணிக்கத் தயாராகும் நிலையில் உறுதிமொழி அடிப்படையிலான குறைந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்துடன் அமையப் பெற்றுள்ள தற்போதைய அரசை பல வழிகளிலும் முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ச்சியாக மக்கள் வருகையை சந்தித்து வரும் மஹிந்த ராஜபக்சவும் தற்போது அதற்காக தயாராகியுள்ள நிலையில் தன்னை நம்பி வெற்றியிலும் தோல்வியிலும் தன்னோடிருக்கும் கட்சிகளைக் கைவிடாது ‘அவர்களுக்காக’ தான் தேர்தலில் போட்டியிட மீண்டும் வரப்போவதாக தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச, வாசுதேவ நாணாயக்கார, டியு குணசேகர, உதய கம்மன்பில, தினேஸ் குணவர்தன போன்றவர்களின் கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மஹிந்த ராஜபக்சவை பிரதம வேட்பாளராக அறிவிக்காவிடின் தாம் பிறிதொரு கூட்டணி அமைத்து களமிறக்குவோம் என தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் நிலையிலேயே மஹிந்த ராஜபக்சவும் இவ்வாறு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. சுகந்திர கட்சியை விட்டு தனித்து மகிந்த போட்டி போடுவாராயின் மகிந்தவே அரசை நிறுவும் சக்தியாக வருவது தடுக்க முடியாது. அதாவது என்ன நடந்தாலும் மகிந்த மீண்டும் வருவதை தடுக்க அவர் கைது செய்யப்பட்டு குடியுரிமை பறிக்கப்படவேண்டும்
No comments
Post a Comment