இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது. அதில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ்மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் எவரும் பங்குபற்றுவதில்லை என்றும், அந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாகக் கடைப்பிடிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘ இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது இரா. சம்பந்தனும் அதில் கலந்து கொண்டிருந்தார் .
இந்த நிலையில் 43 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிங்ககொடியையும் உயர்த்தி பிடித்த பெருமை சம்பந்தன் அவர்களை சாரும்
No comments
Post a Comment