தெலுங்கு நடிகர் ராணாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தெலுங்கு திரைப்பட உலகினர் உறுதிபடுத்தி உள்ளனர்.
ஆந்திராவில் உள்ள பத்திரிகைகளிலும் இது பரபரப்பு செய்தியாக வெளிவந்துள்ளது. சமந்தா தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாகவும் நடித்து இருக்கிறார். சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன.
இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். தன்னுடன் நடிக்கும் மற்ற கதாநாயகிகளோடு சித்தார்த் நெருக்கமாக பழகுவதாகவும், இது சமந்தாவுக்கு பிடிக்காததால் காதலை முறித்து விட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் ராணாவுடன் புதிதாக அவருக்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ராணா ஏற்கனவே திரிஷாவுடன் இணைத்து பேசப்பட்டார். பிறகு இருவருமே நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று மறுத்தனர். ராணா தெலுங்கில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். ஹிந்தியிலும் நடித்துள்ளார். இவர் மறைந்த பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் பேரன் ஆவார்.
Social Buttons