Latest News

February 01, 2015

பிரிட்டிஷ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தனது விஜயத்தை நிறைவு செய்து கொண்டார்!
by Unknown - 0

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரிட்டிஷ் வெளிவிவகாரத்துறை  அமைச்சர் ஹியூகோ சுவ தாயகம் திரும்பியுள்ளார்.

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் அவரினால் மேற்கொள்ளப்பட்ட இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி செல்வதற்கான சகல உதவிகளையும் பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, அவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து இரு தரப்பு விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, ஜனநாயக மற்றும் வெளிப்படைத் தன்மையில், இலங்கை செயல்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்திருந்த கருத்தினை அவர் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தீர்க்கப்படாத தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ சுவ குறிப்பிட்டார்.

அதேவேளை, அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உட்பட பல தரப்பினரையும் பிரிட்டிஸ் அமைச்சர் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, வட மாகாண தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்துள்ள ஆயிரம் கோடி ரூபா நிதி உதவிக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார். 

« PREV
NEXT »