எதிர்கட்சிகளது, அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கொண்டு, அடுத்த பொது தேர்தலில் போட்டியிட தயார் என எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பொது தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு தலைமைத்துவம் வகிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக அவர் குறி;ப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக ஒத்துழைப்பு வழங்க சுதந்திர கட்சி உறுப்பினர்கள் குழு தீர்மானித்ததாக எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
Social Buttons