உலகின் மோசமான ஊடக சுதந்திரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால் வெளியிடப்படும் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் ஆட்சி வகித்த காலத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கை உலகில் 165ம் நிலையை வகிக்கின்றது. மொத்தமாக 180 நாடுகளில் இலங்கை 165ம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டில் 162 இடத்தை வகித்து வந்த இலங்கை தற்போது 165ம் இடம் வரையில் பின் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் ஊடக சுதந்திர நிலைமைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என எல்கலைக்களற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
Social Buttons