வடக்கில் யுத்தத்தின் அச்சம் இன்னமும் நீங்கவில்லை என இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் மேலும தெரிவித்துள்ளார்.
நம்பகமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டியது அவசயிமானது என அவர் வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளர்ர்.
யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் இன்னமும் வடுக்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment