இலங்கையின் தைரியமான தலைவர் மஹிந்த ராஜபக் ஷவேயாகும். மஹிந்த என்பது பெயர் அல்ல. அது ஒரு நாடு. மேலும் 58 இலட்சம் மக்களின் விருப்பை வெற்றி பெற செய்யும் நோக்குடன் இன்று இடம்பெறவிருக்கும் பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வருகை தராவிடின் இலட்சக்கணக்கான மக்களுடன் மெதமுலனவிற்கு செல்வோம் என தாய் நாட்டிற்கான கலைஞர் அமைப்பு சூளுரைத்தது.
மேலும் தற்போது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாம் முன்பு எச்சரிக்கை விடுத்ததை போன்று வடமாகாண செயற்பாடுகள் காணப்படுகிறது. முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்களின் கையும் ஓங்கியுள்ளது. இவற்றிலிருந்து நாட்டை பாதுகாக்க கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக் ஷவேயாவார். அவரையே பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டும் எனவும் அவ்வமைப்பு கோரியது.
தாய்நாட்டுக்கான கலைஞர் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் தேசிய நூலகத்தில் இடம்பெற்ற போதே அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் மதுமாதவ அரவிந்த இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தற்போது நாட்டின் தலைவர் யார் என்பது இதுவரை தெரியாமல் உள்ளது. குழப்பகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களை பொய்யான வார்த்தைகளை கூறி ஏமாற்றி வருகின்றனர்.
இதுவரை ராஜபக் ஷ பெயருடைய எவரையும் கைது செய்யவில்லை. இவையனைத்தும் அரசாங்கத்தின் ஏமாற்று வித்தையாகும்.
எந்த அரசாங்கத்திலும் ஊழல் மோசடியற்றவர்கள் இல்லாமல் இருக்க முடியாது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை போன்று முன்னர் அரசாங்கத்தின் மோசடிக்காரர்களை தண்டிப்பதாக கூறினர்.
எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை. எனவே இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதிலேயே குறியாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் பல தவறுகள் இடம்பெற்றிருக்கலாம். அத்தகைய தவறுகள் இடம்பெற்ற போது அதனை விமர்சித்துள்ளோம். எவ்வாறாயினும் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இனவாதத்தை தூக்கி எறிந்து விட்டு நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியவர் மஹிந்த ராஜபக் ஷ ஆவார். சர்வதேச அழுத்தங்களுக்கு அஞ்சாது தைரியமாக செயற்பட்டு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தவர் இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல எச்சரிக்கைகளை விடு த்தோம். இதன் போது எம்மை இனவாதிகள் என சித்தரித்தனர். எனினும் எமது எச்சரிக்கை கணிப்புகள் ஒவ்வொன்றும் நாட்டில் இடம்பெற்று வருகின்றது.
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அதேபோன்று முஸ்லிம் அடிப்படை வாதிகளான வஹாபிகளின் செயற்பாடு அதிகரித்துள்ளது. மேலும் மேலைத்தேய நாடுகளின் ஆக்கிரமிப்பும் நாட்டில் ஏற்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்ய மஹிந்த ராஜபக் ஷவே தகுதியானவர். அவரையே ஐ.ம.சு.மு.வின் பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும். சு.கட்சியை பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல.
நாட்டையும் சுதந்திரக் கட்சியையும் பாதுகாப்பதே எமது இலக்காகும். தற்போது நாட்டில் சட்டவிரோதமான பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இவ்வாறான கெடுபிடிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். இந்நிலையில் இன்று புதன்கிழமை மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதர வான பொது கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வர்.
இக் கூட்டத்திற்கு மஹிந்த ராஜபக் ஷவும் கலந்து கொள்வார் என நம்புகிறோம். அக் கூட்டத்திற்கு மஹிந்த ராஜபக் ஷ வருகை தரா விட்டால் நாம் இலட்சக்கணக்கான மக்களுடன் மெத முலனவிலுள்ள அவரது வீட்டிற்கு செல்வோம். பலவந்த மாக அவரை அரசியலுக்குள் கொண்டு வருவோம். அத்தோடு முஸ்லிம் அடிப்படை வாதிகளினாலும் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினாலும் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Social Buttons