முன்னாள் ஜனாதிபதியினை சந்தித்து அவரின் சுகம் விசாரிப்பதற்கு தங்கல்லயில் உள்ள கால்டன் வீட்டிற்கு பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் பதவிக்கு களமிறக்க கூட்டமைப்பின் நான்கு கட்சிகளான தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுத்நதிர முன்னணி மற்றும் வாசுதெவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இவ்வாறு புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சித்து வருவதுடன் இதற்கு இன்னும் முன்னாள் ஜனாதிபதியின் சிக்னல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, எதிர்வரும் 18 ஆம் திகதி ‘மகிந்தவுடன் நாட்டை வெல்வோம்’ என்ற தொனியில் நுகேகொடையில் பேரணி ஒன்றும் மேற்குறிப்பிட்ட கூட்டு கட்சிகளால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
No comments
Post a Comment