இலங்கையில் இருந்து 2012 /8/12 ம் திகதி படகு மூலம் அவுஸ்திரேலியா வந்து 3 வருடங்கள் கழித்து சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு சென்றவர் விமானநிலையத்தில் குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க இவர் இலங்கையில் மீனவர் தொழில் புரிந்து வந்துள்ளார். புதிய அரசாங்கம் வெளிநாடு சென்றவர்களை நாட்டுக்கு வரும்படி கூறிய வார்த்தையைக் கேட்டு பயமில்லாமல் தானாகவே சுய விருப்பத்தின் பேரில் சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் வைத்து கைது செய்து குற்றப் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்துவதாகவும் நாளைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப் பாடுவார் என இலங்கை சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
No comments
Post a Comment