Latest News

February 20, 2015

சிங்களவர்கள் யார் என்று தெரியாது இவர்கள் எம்முடன் மோதுகின்றனர்-நாம் சிங்­கங்கள் . எம்மை சீண்­டினால் விளை­வுகள் மிக மோச­மாகி விடும்
by admin - 0

ஞான­சார தேரர்
Lion
எம்மை இன­வா­தி­க­ளென சித்தி­ரித்­துக்­கொண்டு முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களே இன­வாதக் கருத்­துக்­களை பரப்­பு­கின்­றனர். அஸாத்­சாலி போன்ற முஸ்லிம் இன­வா­தி­களை அர­சி­யலில் இருந்து ஓரங்­கட்­ட வேண்டும் என தெரி­விக்கும் பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், நாம் சிங்­கங்கள் . எம்மை சீண்­டினால் விளை­வுகள் மிக மோச­மாகி விடும் எனவும் எச்­ச­ரித்தார்.
பொது­ பல சேனா­வினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின்போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இதில் தொடர்ந்து அவர் கருத்து தெரி­வித்­த­தா­வது;
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஆத­ரித்து நேற்று (நேற்று முன்­தினம்) நுகே­கொ­டையில் இடம்­பெற்ற மக்கள் பொதுக்­கூட்­டத்தில் இன­வாத செயற்­பா­டு­களோ அல்­லது இன­வாத கருத்­து­களோ எது­வுமே பரப்­பப்­ப­ட­வில்லை. ஆனால் அஸாத் சாலி ஆரம்­பத்தில் சவால் விடுத்­தது மட்­டு­மன்றி இன­வா­தி­க­ளாக சிங்­கள மக்­களை சித்தி­ரித்­தி­ருப்­பதும் கண்­டிக்­கத்­தக்க விட­யமே. எம்மை இன­வா­திகள் என தெரி­விக்கும் இவர்கள் தாங்கள் எவ்­வாறு செயற்­ப­டு­கின்­றனர் என்­பது தொடர்­பிலும் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வினை பெற்றுக் கொள்­வ­தற்­காக இத் தலை­வர்கள் இன­வாதக் கருத்­துக்­களை மட்­டுமே பரப்­பு­கின்­றனர். முஸ்லிம் சமூ­கத்­தினை உண்­மை­யாக நேசிக்கும் அமை­தியை விரும்பும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களோ உண்­மை­யான முஸ்லிம் அமைப்­புக்கள் இங்கு இருக்­கு­மானால் அஸாத் சாலி போன்­றோரை உட­ன­டி­யாக அர­சி­யலில் இருந்து வெளி­யேற்றி ஓரங்­கட்டி விட வேண்டும்.
சிங்­க­ள­வர்கள் யார் என்­பது தெரி­யாது இவர்கள் எம்­முடன் மோதிப் பார்க்­கின்­றனர். நாம் சிங்­கங்­களைப் போன்­ற­வர்கள். நாம் அமை­தி­யாக இருப்­ப­தனால் எம்மை வேட்­டை­யாட முயற்­சிக்­கின்­றனர். ஆனால் எமக்கு கோபம் வரு­மாயின் அதன் பின்னர் நிலை­மைகள் மிக மோச­மா­ன­தாக அமைந்து விடும் என்­பதை முஸ்லிம் பிரி­வி­னை­வாதத் தலை­மைகள் தெளி­வாக விளக்­கிக்­கொள்ள வேண்டும்.
மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­கு­களை கொடுத்து அவரை ஜனா­தி­ப­தி­யாக்கி விட்­டதால் முஸ்லிம் தீவி­ர­வாத செயற்­பா­டு­களை நாட்டில் முன்­னெ­டுக்­கலாம் என எவ­ரேனும் நினைத்தால் அதற்கு ஒரு போதும் சந்­தர்ப்பம் கிடைக்­காது. யார் ஆட்­சிக்கு வந்­தாலும் பௌத்த கொள்கை அழி­யாது. அழிக்க விடவும் மாட்டோம். பள்­ளி­வா­சல்­களில் இன­வா­தத்தைப் பரப்பி முஸ்லிம் சமூகத்தினை நாட்டில் வேறொரு தனித்த சமூகமாக மாற்றுவதன் காரணத்தினாலேயே அன்று முஸ்லிம் இனவாதம் என்ற ஒன்று நாட்டில் உருவாகியுள்ளது. இது மிகப்பெரிய பாதிப்பினையே நாட்டில் ஏற்படுத்தி விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
« PREV
NEXT »