Latest News

February 20, 2015

பட்டதாரிகள் தொடர்பான விபரங்களை திரட்ட நடவடிக்கை
by admin - 0

ஊவா மற்றும் சப்ரகமுவை மாகாணங்களில் ஆசிரியர்களாக கடமையாற்ற விரும்பும் பட்டதாரிகள் தொடர்பான விபரங்களை இராஜாங்க கல்வி அமைச்சு கோரியுள்ளது.
 இதன் அடிப்படையில் கணித,விஞஞான,ஆங்கிலம்,தகவல்,தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் பட்டதாரிகளாக உள்ள மேற்குறித்த மாகாணங்களை சேர்ந்தவர்கள்  இருபாலாரும் தங்களுடைய சுய விபரக் கோவையை, இராஜாங்க கல்வி அமைச்சரின் செயலாளர் எம்.ஆர்.ரவீந்திரன், 

நான்காவது மாடி, இசுறுபாய பத்தரமுல்லை என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. கடித உரையின் இடது புறத்தில் பட்டதாரிகள் விபரம் எனவும் குறிப்பிடுவதோடு அதன் பிரதியை www.radhakrishanan.org  என்ற இணையத்தள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு 0777-982998 என்ற தொலைபேசி என்னுடன் அல்லது www.radhakrishanan.org என்ற இணையத்தளத்துக்கு விஜயம் செய்து மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.   தகவல்களை மிகவிரைவில் அனுப்பிவைக்குமாறு பட்டதாரிகளிடம் கோரப்பட்டுள்ளது 
« PREV
NEXT »