kidnap |
யாழ்.விக்டோரியா வீதியில் வைத்து மாணவியொருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
யாழ். விக்டோரியா வீதியால் வந்து கொண்டிருந்த போது குறித்த மாணவியை வானில் வந்தவர்கள் இன்று காலை கடத்திச் சென்றுள்ளனர்.
பூநகரியை சேர்ந்த மேரி லாவண்யா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.
பூநகரியில் வசிக்கும் இவர், சனி, ஞாயிறு தினங்களில் அரியாலையிலுள்ள உறவினர் வீடொன்றில் தங்கியிருந்து தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று கல்விகற்று வருகின்றார்.
இவ்வாறு இன்றும் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றபோது, ஹயஸ் ரக வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
எனினும் சில தினங்களுக்கு முன்னர் வானில் வந்த சிலர் தன்னை பின்தொடர்வதாக மாணவி தனக்குக்கூறியதாக தாயார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Social Buttons