பொதுவான நேர அட்டவணைக்கு அமைய இன்று பிற்பகல் 2.30 அளவில் ஜனாதிபதி உள்ளி;ட்ட சில அமைச்சர்கள் ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்குச் சொந்தமான வானூர்தியில் இந்தியா சென்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு இணங்க 4 நாள் விஜயமாக இலங்கை தூதுக்குழுவினர் இந்தியா சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஷெயித் அக்பர்தீன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 6 இந்திய மீனவர்களும் 27 மீனவ படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, இலங்கையில் இருந்த இந்திய மீனவர்களின் 87 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
http://www.vivasaayi.com/2015/02/kidnap.html
யாழில் வெள்ளை வானில் மாணவி கடத்தல்
No comments
Post a Comment