யுத்கத் குற்றச் செயல் விசாரணைகளை ஆதரிக்கப் போவதில்லை என இந்திய அறிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு சவால் விடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் ஆரோக்கியமானதாக அமையாது என இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இனச்சுத்திகரிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணைகள் இந்த தருணத்தில் நிலைமைகளை குழப்படையச் செய்யக் கூடுமென தெரிவித்துள்ளனர். எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கை ஜனாதிபதியுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கியமாக தமிழர் பிரச்சினைகள் குறித்தே பேசுவார் என தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு மீள்குடியேற்றம் போன்றன குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
Social Buttons