Latest News

February 11, 2015

ஏமனிலுள்ள பிரிட்டன், அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டன!
by Unknown - 0

ஏமன் நாட்டிலுள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளின் தூதரகங்கள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் நன்மை மற்றும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.

ஷியா தீவிரவாத குழுவினரால் அந்நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத செயற்பாடுகளைத் தொடர்ந்து தமது தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்குடனே தூதரகம் மூடப்பட்டுள்ளது என பிரிட்டன் அரசாங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரிட்டன் தூதுவர் ரொபியாஸ் எல்வூட் இன்று (11) ​வௌியிட்ட அறிக்கையில் கருத்து வௌியிடுகையில், ஏமன் ஷானா பிரதேசத்திலுள்ள பிரிட்டன் தூதரகத்தின் சகல ஊழியர்களும்  இன்று அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டனர் என தெரிவித்துள்ளார். அத்துடன்  அப்பிரதேசத்திலுள்ள பிரிட்டன் மக்கள் அனைவரையும் "உடனடியாக வௌியேறுங்கள்" “leave immediately” என்ற சொற்பதத்தினூடாக விளக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இன்று பிரிட்டன் தூதரகம் மூடப்படுவதற்கு முன்னர் ஏமனில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் நேற்று (10) மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக ஏமன் மற்றும் அதன் தலைநகரை ஷியா ஹெளதி போராளிகள் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருந்து பல விடயங்களை மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் கருத்து வௌியிடுகையில், ஏமன் கிளையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படுவதுடன் அல்கைய்தா மற்றும் பல இயக்கங்களின் பயங்கரவாதங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பாதிக்கப்படாது . 

அத்துடன் உலகில் மிகவும் பயங்கரவதமான இயக்கமாகவும் அதனை கருதலாம் ஆகவே எமது தூதரகங்கள் மூடப்பட்டாலும் அனைத்து நாடுகளினதும் உதவிகள் இப்பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
« PREV
NEXT »