Latest News

February 06, 2015

மட்டக்களப்பில் இராணுவம் பலி-இராணுவ முரண்பாட்டின் ஆரம்பமா?
by admin - 0


மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி 5ஆம் குறிச்சி பகுதியில் பிற்பகல் 4.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

5ஆம் குறிச்சி பகுதியில் கடமையிலிருந்த மேற்படி இராணுவ வீரர், கடமையை முடித்துக் கொண்டு கோவில்குளம் இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சக இராணுவ வீரர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த இவர் தூப்பாக்கி குண்டு தாக்குதலில் சாவடைந்துள்ளார். இது இராணுவத்துக்குள் ஏற்பட்ட உட்பூசலின் வெளிப்படா? அல்லது தற்கொலை முயற்சியா?என காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவத்தில், மதவாச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய டபிள்யூ.எம்.கருணாரத்ன என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார்.

« PREV
NEXT »

No comments