இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் சம்பந்தமான விடயங்களை நிறைவேற்ற இலங்கைக்கு ஒரு வருடம் காலஅவகாசத்தை வழங்க அமெரிக்க முனைப்பகளை மேற்கொண்டு வருகிறது. புதிய அரசு இலங்கையில் தெரிவு செய்யப்பட்டதால் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இந்த அரசு தெரிவு செய்வதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதாலும் தமிழ் மக்களுக்கு போதிய நெடுங்கால அரசியல் தந்திரத்தை போதிக்க சிறந்த தமிழ் தலைமை இன்மையாலும் தமிழ் மக்களின் ஆதரவு பெற்று மைத்திரி தெரிவானதின் பலன் இனிமேல் தமிழ் மக்கள் அறுவடை செய்வார்கள்.
இதன் முதல் கட்டமே அமெரிக்காவின் இந்த முடிவு
போர்க்குற்றங்கள் சம்பந்தமான விடயங்களை நிறைவேற்ற இலங்கைக்கு கால அவகாசம் தரப்படுகிறது .குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்க ஒரு வருட காலம் அவசியம் என அரசாங்கம் அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் கோரியுள்ளது.
இலங்கையின் கோரிக்கையை அவர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதற்கு அமெரிக்க நிர்வாகிகளும் இணங்கியிருப்பதாக அமெரிக்க அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான யோசனையை விவாதிப்பதும் ஒத்தவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
No comments
Post a Comment