Latest News

February 05, 2015

ஐஸ்வர்யாராய் மீண்டும் திரையில் !
by Unknown - 0

ஐஸ்வர்யாராய்  நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படபிடிப்பு செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது. 

ஐஸ்வர்யாராய், 2010ஆம் ஆண்டு வெளியான குஷாரிஷ் என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. மகள் ஆரத்யாவை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை.

உடம்பும் எடை அதிகரித்தது.  இந்த நிலையில் ஹிந்தி இயக்குநர் சஞ்சய் குப்தா சமீபத்தில் ஐஸ்வர்யாராயை அணுகி ஒரு கதை சொன்னார்.  அது ஐஸ்வர்யாராய்க்கு பிடித்து போனது. நடிக்க சம்மதித்தார். இதையடுத்து கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்துள்ளார்.

அவர் நடிக்கும் திரைப்படத்துக்கு 'ஜஸ்பா'' என பெயரிட்டுள்ளனர்.  இதன் படப்பிடிப்பு மும்பையில் இன்று காலை ஆரம்பமாகியது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள திரைப்படமாக இது தயாராகிறது.  இந்த திரைப்படத்தில் ஐஸூக்கு வழக்கறிஞர் வேடமாம். அதனால் அதற்கான பயிற்சிகள் எடுத்து தன்னை தயார்படுத்தி உள்ளாராம்.
« PREV
NEXT »